மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டம்! வடக்கு தரப்பு விசேட கோரிக்கை
சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தினால் மீன்களை ஏற்றுமதி செய்யலாம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹிந்துனெத்தியின் ஊடக அறிக்கையில் இலங்கையின் பொருளாதார சரிவில் எதிர்காலத்தில் மீன்களும் இறக்குமதி செய்கின்ற நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மீன்களின் தரத்திலும் குறைபாடு
அத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் தரத்திலும் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடற்றொழில் துறைகளில் அதிக மீன்கள் உற்பத்தியாகும் கடற்பகுதியாக வடக்கு பகுதியே காணப்படுகிறது.
அப்பகுதியில் நடைபெறும் தென்னிந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து வடக்கு தொழிலாளர்கள் சட்டப்படி சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் உறுதி செய்யுமாக இருந்தால், உள்நாட்டிற்கு தேவையான மீன் உணவையும் ஏற்றுமதி செய்வதற்கான மீன்களையும் வடக்கு கடற்தொழிலாளர்களால் ஏற்படுத்த முடியும்.
இதற்கு அநுர அரசாங்கம் தயாரா?
அமைச்சர்கள் பொருளாதாரம் சரிகிறது என மக்களை அச்சுறுத்துவதை தவிர்த்து நடைமுறைச் செயற்பாடுகளில் இறங்குங்கள்.
இதன் மூலம் வடக்கில் மீன்படி துறையில் ஏற்படும் மாற்றம் நாட்டின் பொருளாதார உயர்ச்சியிலும் வலுச் சேர்க்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |