நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : மாற்றத்திற்குள்ளான இலங்கை அணி
காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்து (New Zealand) அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட வரிசையில் பல மாற்றங்களை,அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்ய உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி கமிந்து மெண்டிஸ், ஐந்தாவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்தப்படுகிறார் அனுபவம் மற்றும் பன்முகத் திறமைக் கொண்ட தினேஸ் சந்திமால், மூன்றாவது இடத்தில் துடுப்பாடவுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்
குசல் மெண்டிஸ் ஏழாவது இடத்தில் துடுப்பெடுத்தாடி, விக்கெட் காப்பாளராகவும் செயற்படுவார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, ரமேஸ் மெண்டிஸ் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக அணியில் இணைகிறார்.
இந்தப் போட்டியில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட அணியில் திமுத் கருணாரத்ன, பத்தும் நிஸ்ஸங்க, தினேஸ் சந்திமல், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(தலைவர்), குசல் மெண்டிஸ், ரமேஸ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
