இன்டர்நேசனல் மாஸ்டர்ஸ் லீக்கின் முதலாவது தொடரில் இலங்கைக்கும் வாய்ப்பு
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஆறு நாடுகளின், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இன்டர்நேசனல் மாஸ்டர்ஸ் லீக்கின் முதலாவது தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப்போட்டிகள் 2024, நவம்பர் 17, முதல் 2024 டிசம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
எனினும் பாகிஸ்தான், பங்களாதேஸ், நியூஸிலாந்து, உட்பட்ட ஏனைய நாடுகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கவில்லை.
இன்டர்நெசனல் மாஸ்டர்ஸ் லீக்
இன்டர்நெசனல் மாஸ்டர்ஸ் லீக்கிற்கான நான்கு போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்கள் நவி மும்பையில் உள்ள பாட்டீல் மைதானத்தில்; நடத்தப்படவுள்ளன.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் தலைமையிலான இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதல் போட்டி, நவம்பர் 17இல் நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டியில் சேன் வொட்சனின் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் ஜெக் கலிஸின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து இலங்கை அணி, இயோன் மோர்கனின் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஆரம்ப போட்டி
இந்தநிலையில் பிரையன் லாராவின் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் அஸ்திரேலியாவை எதிர்த்து போட்டியிடவுள்ளது.
மும்பையில் இடம்பெறவுள்ள ஆரம்ப போட்டிகளுக்குப் பின்னர், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆட்டங்கள், 2024 நவம்பர் 21 அன்று முதல் லக்னோவின் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றப்படவுள்ளன.
அங்கு இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அத்துடன் அங்கு 6 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் பின்னர் ராய்பூரின் சாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 8 ஆட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரையிறுதி மற்றும் டிசம்பர் 8 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியும் அடங்கும். அங்கு சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் செம்பியன்கள் முடிசூட்டப்படுவார்கள்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |