இந்தியாவில் குரங்கு அம்மை நோயினால் பதிவாகிய முதல் மரணம் (Video)
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பதிவான முதல் மரணம் இதுவாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
