இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட முதல் மனு
இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தின் (online safety bill) கீழ் முதல் மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க (janaka ratnayake) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் 24 (1) மற்றும் பிரிவு 24 (2) ஆகியவற்றின் அடிப்படையில் மனுதாரர் ஜானக ரத்நாயக்கவுக்கு ஆதரவாக நிபந்தனை உத்தரவைப் பிறப்பித்தார்.
தவறான அறிக்கை
அத்துடன் அந்த உத்தரவை பிரதிவாதிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார். மனுதாரரான, ஜனக ரத்நாயக்க தனது மனுவில், பிரதிவாதிகள் தமது தனிப்பட்ட தகவல்களை பரப்பியதாக அல்லது பரப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தாம் ஒரு "இலக்கு தனிநபர்" என்றும், அவர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார். பிரதிவாதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தவறான அறிக்கைகளை வழங்கி தம்மை வேண்டுமென்றே துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக காயத்ரி பிம்பா, ஜானக ராஜபக்ஸ மற்றும் ஓஷல ஹேரத் உட்பட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |