பிரித்தானியாவில் இருந்து உடன் திருப்பி அனுப்பட்ட இந்தியர்..
புதிய one-in one-out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியா, முதல் புலம்பெயர் நபரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
வெளியாகியுள்ள சர்வதேச செய்திகளின்படி, திருப்பி அனுப்பப்பட்டவர் ஒரு இந்திய பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரான்ஸ் துறைமுகம் ஒருவரை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தியிருந்தாலும், அவரது தேசியத்தை வெளியிட மறுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு வந்தபோது கையெழுத்திடப்பட்டது.
புதிய திட்டம்
அதன்படி, 'ஒருவர் வெளியேறினாரல் ஒருவர் உள்ளே' என்ற அடிப்படையில் பிரான்சில் உள்ள சரிபார்க்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா ஏற்கும் திட்டம் இதுவாகும்.

இதற்கமைய, ஓகஸ்ட் மாதத்தில் சிறிய படகில் பிரித்தானியாவிற்கு வந்த அந்த நபர், ஒரு வணிக விமானத்தில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது, மனித கடத்தல் குற்றசாட்டுகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். மேலும், பிரித்தானிய அரசு எல்லை பாதுகாப்பிற்காக 100 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri