லால் காந்தவிடம் முதல் விசாரணை! பட்டலந்த தொடர்பில் தலதா முன்வைத்துள்ள கோரிக்கை
பட்டலந்த ஆணைக்குழு குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தாவிடமிருந்து முதல் அறிக்கையை பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (மார்ச் 18) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1987 - 89ஆம் ஆண்டு காலத்தில் ஜே.வி.பி.க்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த மற்றும் ஜே.வி.பி.க்கு எதிராக சாட்சியமளித்த பிக்குகள், கிராம அதிகாரிகள் மற்றும் பலர் கொல்லப்பட்டதாக லால் காந்த கடந்த தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறியதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிக்கை
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அமைச்சரின் அறிக்கையை பலர் பார்த்ததாகவும், அந்த காணொளி தன்னிடம் இருப்பதாகவும் அதுகோரல கூறியுள்ளார்.
அமைச்சர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டது ஒரு தீவிரமான விடயம் என்றும், அதன்படி, 1987- 89 காலகட்டம் தொடர்பான விசாரணைகளில் லால் காந்தாவின் பெயர் முதல் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பயங்கரவாதக் காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிதான் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறிய பொதுச் செயலாளர், அந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
