மட்டக்களப்பில் முதன் முறையாக மாபெரும் சதுரங்க போட்டி
மட்டக்களப்பின் வரலாற்றில் முதன் முறையாக சுமார் 214 பேர் என்ற அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் சதுரங்கப் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
எட்டுப் பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
சனி மற்றும் ஞாயிறு (30,31.08.2025) ஆகிய இரு தினங்களும் இடம்பெற்ற இப்போட்டியிலிருந்து 67 பேர் வெற்றி வாகை சூடிக் கொண்டனர்.
மட்டக்களப்பு றொட்டரக்ட் கழகமானது மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் செஸ் கழகத்துடன் இணைந்து, திறமைகள், பொறுமை மற்றும் தந்திரோபாயத் திறமைக்கு சான்றாக ஆர்வமுள்ள வீரர்களை ஒன்றிணைத்து, “செக்மேற் சம்பியன்சிப் 2025” என்ற இந்த சிறப்பு நிகழ்வை நடத்தியிருந்தனர்.











