மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு எவ்வாறு அமைந்திருக்கும்?
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு மனித உரிமைகள் நிலைமை குறித்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழுமத்தால் இந்த தீர்மானம் வரையப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், கோவிட் தொற்றுநோய் விடயத்தில் மத நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.




