முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கான முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் நாளை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் ஏற்றப்படவுள்ளதாக முள்ளியவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் அறிவித்துள்ளார்கள்.
காலை 8.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 அகவைக்கு மேற்பட்ட நிரந்தர, தற்காலிக குடியிருப்பாளர்கள் கோவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை முதலாவது தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகர்ப் பகுதியினை அண்டிய கிராமங்களில் பலர் முதலாவது தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் காணப்படுகின்றார்கள்.
இந்நிலையில் முள்ளியவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவிப்பினை விடுத்து வருகின்றார்கள்.


