பிரான்ஸில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம்
பிரான்ஸின் கரீபியன் தீவான மார்டினியுக்கில் கோவிட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் சிவில் சேவையாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எதிராக அங்கு இரண்டாம் நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாடலூப் தீவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பவர்கள், மார்டினிக் காவல்துறையினர் கடமையிலிருந்தபோது, எரியும் டயர்களின் தடுப்புகளால் தாக்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களைத் தீயிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளோரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் அறியமுடிந்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan