காத்தான்குடியில் தீ விபத்து: 40 கோடி பெறுமதியான பொருட்கள் இழப்பு(Photos)
காத்தான்குடி ஹாட்வெயார் களஞ்சியசாலையில் தீப்பரவல் 40 கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.
தீ விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி-01, முதியோர் இல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் ஒன்றுக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்கிழமை (15.11.2022) நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ பரவலின் காரணமாக களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், மின்னொழுக்கே இதற்கு காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
40 கோடி பெறுமதியான பொருட்கள் இழப்பு
இக்களஞ்சியசாலையில் 40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவை அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் அதன் உரிமையாளர் நஜீப் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதான வீதிலுள்ள கொழும்பு ஹார்ட்வெயார் நிறுவனத்திற்குச்
சொந்தமான களஞ்சியசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.












16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
