இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள காட்டுத்தீ அணைக்கும் விமானங்கள்
காட்டுத்தீயை அணைக்கும் விமானங்கள் மூன்று இரத்மலானை விமான நிலையத்தில் நேற்றைய தினம் 17.05.2023 தரையிறங்கியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த இந்த விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்தில் சேவை வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பதற்கான தண்ணீரை ஏற்றிச்செல்வதற்கும் இங்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து சேவை வசதிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் மாதாந்த வருமானம் அதிகரிக்கும் எனவும் Fireboss 208 Airtractors இன் முகாமையாளர் அருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் கோவிட் நிலைமைக்குப் பின்னர் இரத்மலானை விமான நிலையத்தின் உள்நாட்டு விமானச் சேவைகள் மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் தற்போது மேம்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு உள்ளூர் நிறுவனங்களுக்கு விமானங்களை நிறுத்தும் இடங்களை வழங்குவதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |