தெஹிவளையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு
தெஹிவளைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் (19) ஏற்பட்ட தீ அனர்த்தம் ஒன்றின் காரணமாக கோடிக் கணக்கான பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
தெஹிவளை, களுபோவிலை பிரதேசத்தில் அமைந்திருந்த சினிமா செட் தயாரிப்பு மற்றும் மின்சார உபகரணங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனமொன்றில் நேற்று பிற்பகல் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ அனர்த்தம்
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைப்பதற்கும், தீ பரவாமல் தடுப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

எனினும் குறித்த தீ விபத்தின் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியுள்ள உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri