திவுலப்பிட்டி களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து - ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு
திவுலப்பிட்டி - வாவகெதர பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஏற்றுமதிக்காகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பழைய இலத்திரனியல் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம்..
முன்னதாக தேங்காய் மட்டைத் தொழிற்சாலை எனக் குறிப்பிடப்பட்டிருந்த இந்தக் கட்டடம், ஏற்றுமதிக்கான இலத்திரனியல் கழிவுகள் மற்றும் உபகரணங்களைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் நிலையம் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்புப் பிரிவுகளுடன் இலங்கை விமானப்படை, இராணுவம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திவுலப்பிட்டி பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த அனர்த்தத்தில் பாரிய சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து திவுலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள புயல்! அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை