நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!
நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை முன்னிட்டு இவ்வாறு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பட்டாசு உற்பத்தி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.
எனினும், தேர்தல்களை முன்னிட்டு முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.