கனடா இராணுவ முகாமில் பயங்கர தீ விபத்து : 4 வீரர்கள் உயிரிழப்பு - 39 பேர் காயம்
கனடாவின் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள 'வைன்ரைட்' (CFB Wainwright) இராணுவ பயிற்சி முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கனடா ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 39 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக
கடந்த சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணிக்கு (22:00 GMT) வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 39 பேரில், குறைந்தபட்சம் 19 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அல்பெர்ட்டா மாகாண பிரதமர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒட்டாவாவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, அமைதி காலத்தில் கனடா இராணுவ நிலப்பரப்பில் நடந்த மிக மோசமான துயரங்களில் இதுவும் ஒன்று எனக் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.