ஹொரணையில் பற்றி எரியும் முதியோர் இல்லம் ! 8 பேரின் சடலங்கள் மீட்பு என தகவல்
புதிய இணைப்பு
ஹொரணை - படகோடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவல்படி, தீ விபத்தைத் தொடர்ந்து அந்த வளாகத்திலிருந்து 8க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மேலும் எட்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் 51 பேர் அவசரகால மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
ஹொரணை, படகொட, கல்பாத்தா பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று பிற்பகல் (3) ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 44 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மேலும் 11 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஹொரணை, பட்டகொட, கல்பாத்தா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
55 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 55 பேர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காண்க...
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan