நுவரெலியா - ராகலை ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
நுவரெலியா - ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் று (27.10.2025) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம்
எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலில் மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பரவிய நிலையில் பின்னர் முழுவதும் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ விபத்துக்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri