அல்லைப்பிட்டியில் பகுதியில் தீ விபத்து - கட்டங்கள் உட்பட பெறுமதியான நூல்கள் எரிந்து நாசம்
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் இன்று(28.04.2026) எரிந்து நாசமாகியுள்ளது.
விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன், பல ரூபாய் பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நூல்கள் மற்றும் தளபாடங்கள் தீக்கிரை
இந்த நிறுவனம், வைத்தியர் தயா சோமசுந்தரம் என்பவரால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதில், முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த நிலையம் தீக்கிரையாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan