தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் பெரும் பாதிப்பு
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் நல்லதண்ணி லக்ஸபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தானது இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான தேயிலை அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து
தேயிலை தூள் உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தீ, தேயிலை கொழுந்து சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு பரவி, பொதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்த தேயிலை தூளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, பரவத் தொடங்கிய தீ, தேயிலை தொழிற்சாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்டத் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை, மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பொலிஸார் விசாரணை
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
