வெளிநாடொன்றில் ஏற்பட்ட துயர சம்பவம்! 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள பொது வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
செனகல் நாட்டின் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது. இங்குள்ள பொது வைத்தியசாலை ஒன்றில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை அறையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி மேக்கி சால் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri