திடீரென பற்றியெரிந்த வீடு: தீயில் சிக்கி உடல் கருகி நபரொருவர் பலி
இரத்தினபுரி - மல்வல வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அங்கு தங்கியிருந்த ஒருவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

தீ விபத்திற்கான காரணம்
உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும், மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan