தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய நிலையில் 6 பேரும் மின்தூக்கியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறி இறந்தனர் என்று மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
மருத்துவமனையில் இருந்த சுமார் 30 உள்நோயாளிகளை வெளியேற்றிய பின்னரே இந்த 6 பேரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |