இராகலையில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து - பலர் பாதிப்பு
இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்திருந்தனர். இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் வீட்டிலிருந்த உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த தோட்டத்தில் 9ஆவது இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அனர்த்தத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் வந்து பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என தெரிவித்து இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன்
இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.







செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
