கட்டுகஸ்தோட்டை தீ விபத்து! இளைஞரொருவர் வீட்டிற்குள் திரவம் வீசியதாக தாய் வாக்குமூலம் (Photos)

Death Police Fire Accident Katugasthota House Damaged
By Mayuri Mar 24, 2022 08:17 AM GMT
Report

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 60 வயதான தாய் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏற்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்படும் பெண்ணை (தாய்) மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்களுடன் உயிரிழந்த யுவதியின் காதலன் வீட்டுக்கு வந்து தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் மேற்படி இளைஞருக்கும் இடையிலான காதல் தொடர்பே இந்த தீ பரவலுக்கான காரணம் என்றும், இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

கட்டுகஸ்தோட்டை தீ விபத்து! இளைஞரொருவர் வீட்டிற்குள் திரவம் வீசியதாக தாய் வாக்குமூலம் (Photos) | Fire Accident At Katugasthota

கட்டுகஸ்தோட்டை தீ விபத்து! இளைஞரொருவர் வீட்டிற்குள் திரவம் வீசியதாக தாய் வாக்குமூலம் (Photos) | Fire Accident At Katugasthota

கட்டுகஸ்தோட்டை தீ விபத்து! இளைஞரொருவர் வீட்டிற்குள் திரவம் வீசியதாக தாய் வாக்குமூலம் (Photos) | Fire Accident At Katugasthota

கட்டுகஸ்தோட்டை தீ விபத்து! இளைஞரொருவர் வீட்டிற்குள் திரவம் வீசியதாக தாய் வாக்குமூலம் (Photos) | Fire Accident At Katugasthota

மேலதிக செய்தி: திருமால் 

முதலாம் இணைப்பு

கட்டுகஸ்தோட்டை - மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த தீ அனர்த்தம் காரணமாக 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

என்ற போதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US