காட்டு யானைக்கு வெடி வீசிய குடும்பஸ்தரின் விரல்கள் அகற்றம்
வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வீசிய குடும்பஸ்தர் ஒருவரின் இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளது.
இதனைத் தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு விரல்கள் அகற்றம்
நேற்று முன்தினம் (09.07.2023) வவுனியா கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளது.
இதனைத் தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
