இலங்கை பொலிஸாரின் கைரேகை மற்றும் முக அடையாள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சர்வதேச அரங்கில் அறிமுகம்
இலங்கை பொலிஸார் தமது உயிர்ம அங்கீகார (Biometric) அடையாளத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற 3ஆவது சர்வதேச பொலிஸ் அமைப்பான INTERPOL இன் கைரேகை மற்றும் முக அடையாள மாநாட்டில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 80 நாடுகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இலங்கை பொலிஸார் அடைந்துள்ள முன்னேற்றங்கள்
இலங்கை சார்பில் பங்கேற்ற குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ருவன் குமார, இலங்கையின் தானியங்கி கைரேகை அடையாளக் கட்டமைப்பு (AFIS) மற்றும் தானியங்கி முக அடையாளக் கட்டமைப்பு (AFRS) தொடர்பான விளக்கத்தை முன்வைத்தார்.

“வளங்களைத் தாண்டிய புத்தாக்கம்” என்ற தொனிப்பொருளில், குறைந்த நிதி மற்றும் வளங்களைக் கொண்ட சூழலிலும் உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸார் அடைந்துள்ள முன்னேற்றங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், சர்வதேச பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இந்த மாநாடு அமைந்தது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri