போக்குவரத்து விதிமீறல்களுக்கான நிகழ்விட அபராதம்! பயன்படுத்த மறுக்கும் பொலிஸாருக்கு எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GovPay அமைப்பு மூலம் நிகழ்விடத்திலேயே செலுத்த வசதிசெய்து தராத போக்குவரத்து பொலிஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிககப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு - வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள்
முன்னர், வாகன சாரதிகள் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த கணிசமான நேரத்தை வீணடிக்க வேண்டியிருந்தது. வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் பொதுமக்களின் நேரத்தையும் பொருளாதாரச் செலவுகளையும் சேமிக்கவும் GovPay மூலம் அபராதம் செலுத்தும் முறை 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஒன்பது மாகாணங்களிலும் விழிப்புணர்வுத் திட்டமும், இந்த முறையைச் செயல்படுத்தும் பணியும் நிறைவடைந்துள்ளன.
மேலும், இந்தச் சேவையை எளிதாக்குவதற்காக லங்காபே (Lankapay) மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12% தற்போது GovPay மூலம் செலுத்தப்படுகின்றது.இருப்பினும், சில போக்குவரத்து அதிகாரிகள், GovPay திட்டத்தின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாகன சாரதிகள் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, அதற்குப் பதிலாக அவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.
அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு
இந்த முறைப்பாடுகளை நாங்கள் விசாரித்தபோது, சில அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கருவிகளை எடுத்துச் செல்லத் தவறியதையும், மற்றவர்கள் திறமையின்மை மற்றும் மனப்பான்மை தொடர்பான சிக்கல்களை வெளிப்படுத்தியதையும் கண்டறிந்தோம்.
ஒரு அதிகாரி, தங்களுக்கு இந்தத் திட்டம் பற்றித் தெரியாது என்றோ அல்லது இந்த வசதி கிடைக்கவில்லை என்றோ கூறினால், அது கடமையில் அலட்சியம் காட்டுவதற்கும் ஒழுங்கு மீறலுக்கும் சமமாகும்.

GovPay திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அனைத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கும் நினைவூட்டி, பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
GovPay மூலம் பணம் செலுத்த மறுக்கும் அதிகாரிகள் மீது 070 4756600 என்ற ஹொட்லைன் மூலம் முறைப்பாடுகளை செய்யலாம் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 18 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam