அரசாங்கத்திற்கு நிதி பிரச்சினை - பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்: மகிந்த அமரவீர
அனைத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் அடுத்த வருடம் இந்த நிலைமை மேலும் மோசமடையும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் நிதி ரீதியான சிக்கலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
நாம் பெற்ற கடனுக்கான வட்டி மற்றும் தவணையை செலுத்த மீண்டும் கடனை பெற நேரிட்டுள்ளது. அந்தளவுக்கு எமது நாடு பின்நோக்கி சென்றுள்ளது. அனைத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இது எமக்கு தெரியும். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த நிலைமையானது இன்று நாளையுடன் முடிந்து விடும் என்று எம்மால் கூற முடியாது.
தொடர்ந்தும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும். அடுத்தாண்டு உணவு பற்றாக்குறையை எதிர்நோக்க நேரிடும் என உலக உணவு திட்டம் கூறியுள்ளது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
