புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நிதி மோசடி..!
யாழ் (Jaffna) - புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு பணியாளர்கள் பணிபுரிவதோடு, அந்த சங்கத்தின் கீழ் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் 13 மாதங்களுக்குள் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகத்தில் முறைப்பாடு
குறித்த அமைப்பினால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 17 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
