விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியுதவி
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) பிற்பகல், ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.
நிதியத்திலிருந்து நிதியுதவி
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி, அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவதும், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் சமூக நலக் கொள்கைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
நிகழ்வில் அரச அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..