நாட்டைவிட்டு நிதியமைச்சர் வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தகவல்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நிதியமைச்சர் ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்வதற்கு முன் ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது அவர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
