அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வெளிநாட்டுப் பயணங்களிற்கு 40 டொலர்கள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை கொடுப்பனவுகள் குறைக்கப்பட உள்ளதாகவும், சில ரத்து செய்யப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவு குறைப்பு
அரசாங்கத்தின் சார்பில் கல்வி சுற்றுலாக்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றுக்கு வெளிநாடு செல்லும் தரப்பினருக்கு நாளாந்தம் வழங்கப்படும் 40 டொலர் கொடுப்பனவு 25 டொலர்களாக குறைக்கப்படுகின்றது.
இதுவரையில் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட உள்ளது.
நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்து மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு 15 நாட்களுக்கு 75 டொலர் என வழங்கப்பட்ட கொடுப்பனவு தொகை இனி 10 நாட்களுக்கு 40 டொலர்கள் என குறைக்கப்பட உள்ளது.
மேலும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வழங்கப்படும் பொழுதுபோக்கு கொடுப்பனவு தொகையான 750 டொலர் கொடுப்பனவு ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
