நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி தேவையான பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் தற்போது சமர்ப்பிக்கப்படுவதாகச் சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்படி அறிக்கை சம்பந்தமாக மூன்று நாள் விவாதம் ஒன்றைக் கோருவதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இது குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடலாம் எனக் கூறியுள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam