சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு இன்று இறுதி தீர்மானம்
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எழுத்துமூலமாக வழங்கப்பட்ட உறுதிமொழி
இதனைத்தொடர்ந்து சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 10 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
