நுகேகொடை பேரணி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணிக்கு கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

உயர் மட்ட குழுவின் தீர்மானம்
நானும் நுகேகொடையில் தான் இருக்கிறேன்.பேரணிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். உயர் மட்ட குழுவில் பேரணியில் கலந்துகொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது மூன்றாம் நபர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு அது அவசியமில்லை என நினைக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளட்டும். அவர்கள் செய்வதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை.
இவை இரண்டு கட்சிகள். கட்சியின் தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.நாம் எதிர்காலத்தில் எவ்வித சகதியுடன் இணைந்து செயற்படுவது என்று தீர்மானம் எடுப்போம் என்றார்.