உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பம்
நாட்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகவும் குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்றும் இடம்பெற்றுள்ளன.
341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல்
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri