ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி குறிப்பாகக் கேணி அனர்த்தம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு அருகில் கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக் கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம் யாசீம் தாக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
புகாரியடி சந்தியிலிருந்து கிண்ணியா தள வைத்தியசாலையை நோக்கி வந்துகொண்டிருந்த போராட்டத்தின் போது இளைஞர்கள் தன்னை தாக்கியதுடன் ஒளிப்பதிவு செய்த கையடக்கத் தொலைபேசியையும், அடித்து பரித்து சென்றுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளரை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் நாளை அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ஊடகவியலாளர்
தாக்கப்பட்டு கையடக்கத்தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
