மட்டக்களப்பில் கூடாரத்தை அகற்றிய பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தல் மற்றும் பதாகைகளை இன்று அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸார் முழுமையாக அகற்றியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போராட்டக்காரர்களின் கொட்டகை மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டதையடுத்து இன்று காலை முதல் சுடும் வெயிலிலும் தமது சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதி வேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 10வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் மற்றும், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.சிவயோகநாதன் மற்றும் வண.பிதா.கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.













15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
