ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
இலங்கை அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தரம் குறைந்த போலி மருந்துப் பொருட்கள் வழங்கல் காரணமாக சுகாதார சேவைக்கும், பொதுமக்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்த மோசமான நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அமைச்சரவை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக குறித்த வழக்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல்(Transparency International) நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
66 பேர் வழக்கின் பிரதிவாதிகள்
மேற்குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அந்த நிறுவனம் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவை அங்கத்தவர்கள், சுகாதார சேவையின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அதிகாரிகள், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தரமற்ற மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனம், திறைசேரி செயலாளர், பொலிஸ் மா அதிபர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் , சட்ட மா அதிபர் உள்ளிட்ட 66 பேர் வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |