இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள் - அதிசயிக்கும் மக்கள்
அம்பாறையில் இரண்டு யானைகளின் செயற்பாடு சுற்றுலா பயணிகள் உட்பட பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீகவாபி பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு அருகாமையில் இரண்டு யானைகள் பல நாட்களாக சண்டையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய யானைக்கூட்டத்திலுள்ள இரண்டு இளம் வயதுடைய இராட்சத யானைகள் இரண்டிற்கு இடையிலேயே மோதல் ஏற்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் யானையின் காதலை வெல்ல ஒரே கூட்டத்தில் இருக்கும் இத்தகைய ராட்சதர்கள் சண்டையிடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில சமயங்களில் ஒரு யானை உயிரிழக்கும் வரையில் இந்த மோதல் நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது.
யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தம் பல அடி தூரத்திற்கு கேட்கும் என தகவல் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களை அவமதித்துள்ள ஜனாதிபதி! - புத்த பெருமான வந்தாலும் முடியாது (பத்திரிக்கை கண்ணோட்டம்) |


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
