அபிவிருத்தி குழு கூட்டத்தில் மோதல் - வெளியான காணொளி
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்தில் கெட்டபொல அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கொத்மலை பிராந்திய அபிவிருத்தி குழுவின் தலைவருமான நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyathissa) மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் சாமர சுபாஷித டி சில்வா (Chamara Subhashita DE Silva) இடையே இக்கூட்டத்தின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எழுந்த கருத்து முரண்பாடே மோதலாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
