வவுனியாவில் மைதானம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சிலருக்கும் இடையில் சண்டை
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மைதானம் ஒன்றில் ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலிபன் உட்பட சிலருக்கும் வேறு ஒரு தரப்பினருக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பிரதேசத்தில் இரண்டு நாட்களாக இரண்டு தரப்பினருக்கு இடையில் இருந்து வந்த வாக்குவாதங்கள் மோதலாக மாறியுள்ளது. இது தொடர்பான கேட்டறிவதற்காக திலிபன் தரப்பினர் மைதானத்திற்கு சென்றிருந்த போது, அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்துள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற சிலர், அவரது அலுவலக வளாகத்திற்குள் சென்று தாக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அங்கு சென்ற வவுனியா பொலிஸாரர், தாக்குதல் நடத்த முயற்சித்த இருவரை கைது செய்துள்ளதுடன் பதற்றத்தை தணித்துள்ளனர். எவ்வாறாயினும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



