FIFA உலகக் கிண்ணம் 2026: 47 நாடுகளை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்
ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, FIFA உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மூன்று நாடுகள் இணைந்து நடத்திய இந்த பிரம்மாண்ட தொடரில் 48 நாடுகளைச் சேர்ந்த 1,039 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 16 மைதானங்களில் நடைபெற்ற 104 போட்டிகளில் மொத்தம் 308 கோல்கள் அடிக்கப்பட்டு, கடந்த கால சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.
Golden Boot விருது பெற்ற வீரர்
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இந்தத் தொடரில் மொத்தம் 10 கோல்களை அடித்து, தனது இரண்டாவது 'தங்கப் பூட்' (Golden Boot) விருதை வென்றுள்ளார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களையும், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7 கோல்களையும் அடித்து இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் தொடர் முழுவதும் தலா 20 கோல்களை அடித்து தாக்குதல் ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
அதில் இங்கிலாந்து அணி 14 அசிஸ்ட்களையும், பிரான்ஸ் அணி 18 அசிஸ்ட்களையும் பதிவு செய்துள்ளன. மேலும், ஆர்ஜென்டினா அணி 19 கோல்களையும், சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி 14 கோல்களையும் பதிவு செய்துள்ளன.
அதிகமான மஞ்சள அட்டை பெற்ற ஆர்ஜென்டினா
சம்பியன் ஸ்பெயின் அணியின் உனாய் சிமோன் சிறந்த கோல்கீப்பருக்கான 'தங்கக் கிளவுஸ்' (Golden Glove) விருதை வென்றுள்ளார்.

இருப்பினும், பராகுவே அணியின் ஆர்லாண்டோ கில் அதிகபட்சமாக 28 கோல் தடுப்புகளைச் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், ஆர்ஜென்டினா அணி அதிகபட்சமாக 15 மஞ்சள் அட்டைகளையும், எகிப்து அணி 12 மஞ்சள் அட்டைகளையும் பெற்றுள்ளன.
கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 2 சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளன.
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!