குமுழமுனை கொட்டுக்கிணற்றான் கேணி நீரில் வயல் விதைப்பு ஆரம்பம்
முல்லைத்தீவு குமுழமுனையில் உள்ள கொட்டுக்கிணற்றான் பிள்ளையார் கோவில் கேணியின் நீரில் வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ளது.
கேணியில் ஊற்றெடுக்கும் நீரினைக் கொண்டு கேணிக்கு கீழ் உள்ள வயல் நிலங்களில் நெல் விதைப்பினை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.
தலைவெட்டிப்பிள்ளையார் என மக்களால் அழைக்கப்படும் கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் ஊற்றெடுக்கும் நீரினைக் கொண்டு தொடர்ச்சியாக நெல் விதைப்பில் ஆண்டு தோறும் விவசாயிகள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தண்ணிமுறிப்பு குளமும் கோவில் கேணியும்
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் மேற் கொள்ளப்படும் நீர்ப் பாசனத்தினைக் கொண்டு அதிகளவான வயல் நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது போல் கேணி நீரின் கீழும் நீர்ப்பாசனம் மேற் கொள்ளப்படுகின்றது.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள 350 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியும் என அப்பகுதியில் நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


