திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிரிழப்பு
நீர்கொழும்பு வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக இன்று (06) காலை அனுமதிக்கப்பட்ட சிறுவனொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 08 இல் கல்வி கற்றுவரும் அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணம் குறித்து தந்தை மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது மகனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று (05) இரவு எனது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மகன் மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இரவு உணவை மகன் எடுத்துக்கொண்ட நிலையில் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri