பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு அருகில் மனித கருவின் பாகங்கள் மீட்பு
பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதிக்கு அருகில் மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விஜேவர்தன மண்டபத்தின் அதிகாரி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மதியம் பேராதனை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
மருத்துவ பீடம், அறிவியல் பீடம் மற்றும் கால்நடை மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட சுமார் 2,000 மாணவர்கள் இந்த விடுதியில் உள்ளனர்.

கருவைப் போன்ற பாகங்களைக் கண்டறிந்த பின்னர், அந்த பாகங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
மேலதிக தகவல்-அமல்
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam