நுவரெலியா- இஸ்கிராப் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா
நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த (16) ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகிறது.
இதில் சனிக்கிழமை (17) புண்ணிய வாசகம் கிரிகையுடன் பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (18) காலை பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு ,பறவை காவடி,கற்பூர சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.
நேர்த்திக்கடன்
அதன் பின்னர் பிற்பகல் சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று, அலங்கார தீப ஆராதனை இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் வெளி வீதியூடாக நுவரெலியா பிரதான நகரை தேரேறி வலம் வந்து மக்களுக்கு அருள் பாலித்துள்ளனர்.
இதில் பல பகுதியில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (19) பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (20) தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
