மீண்டும் களைக்கட்டும் கொழும்பு (video)
பண்டிகை காலம் என்றாலே மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
எனவே எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது துன்பங்களை மறந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் ஏராளமாக குவிந்து வாழும் கொழும்பு பகுதியில் பண்டிகை காலம் என்பது ஆரம்ப காலங்களில் கோலாகலமாக காணப்பட்டது.
இருப்பினும் கோவிட் காலத்துக்கு பின் கொழும்பு பகுதியில் வசிக்கும் மக்கள் பண்டிகை காலத்தை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டில் சலக விடயங்களிலும் சற்று மாறுபட்ட சூழ்நிலை காணப்படுவதால் மக்கள் கடந்த கால இன்னல்களை மறந்து புத்தாண்டு கொண்டாடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதும், பொருட்கள் கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்துவதை காணக்கூடியதாயுள்ளது.
